லக்னோ: மூலிகைச் செடியான துளசி, பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும் வல்லமை பெற்றது என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல், பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் திறமையும் அதற்கு உண்டாம்.
இதுகுறித்து ஆயுர்வேத மருத்துவ நிபுணரான டாக்டர் யு.கே. திவாரி கூறுகையில், துளசியிடம் காய்ச்சலைத் தடுக்கக் கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில்தான் கண்டறிந்துள்ளனர். உடலின் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தக் கூடிய வல்லமை துளசிக்கு உண்டு.
எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் அதற்கு உண்டு. வைரஸ் காய்ச்சல் வந்தால் அதைக் குணப்படுத்தக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு.
ஜாப்பனீஸ் என்செபலாடிடிஸ் எனப்படும் மூளைக் காய்ச்சலுக்கு துளசியைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும், தடுக்கும் வல்லமையும் துளசிக்கு உண்டு.
நோய் வராமல் தடுக்கும் சக்தி மட்டுமல்லாமல், வந்தால் அதை விரைவில் குணமாக்கும் சக்தியும் துளசிக்கு உண்டு.
பன்றிக் காய்ச்சல் வந்தவர்களுக்கு துளசியை உரிய முறையில் கொடுத்தால் அது விரைவில் குணப்படுத்தி விடும். உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையையும் அது பலப்படுத்தும் என்கிறார் திவாரி.
டாக்டர் பூபேஷ் படேல் என்ற டாக்டர் கூறுகையில், துளசியால் பன்றிக் காய்ச்சலை வராமல் தவிர்க்க முடியும்.
20 அல்லது 25 புத்தம் புதிய துளசி இலைகளை எடுத்து அதைச் சாறாக்கி அல்லது மை போல அரைத்தோ, வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் பன்றிக் காய்ச்சல் குணமாகும்.
இப்படிச் செய்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் பன்றிக் காய்ச்சல் நம்மை அண்டாது என்கிறார்.
நோயின் தன்மை மற்றும் தீவிரத்திற்கேற்ப துளசியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார் படேல்.
துளசிச் செடிகளின் வகைகளான கிருஷ்ணா (ஓசிமம் சாங்டம்), வானா (ஓசிமம் கிராடிசிமம்), கதுகி (பிக்ரோரிசா குர்ரோவா) ஆகிய நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கும் வல்லமை பெற்றவை.
துளசியால் எந்தவிதமான பக்க விளைவுகளும் கிடையாது என்பதும் முக்கியமான ஒன்று என்கிறார் படேல்.
சித்த மருத்துவத்திலும் வழி உண்டு...
பன்றிக் காய்ச்சலுக்கு சித்த வைத்தியத்தின் மூலம் முன் கூட்டியே வராமல் தடுக்க முடியும் என்கிறார் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மத்திய அரசின் சித்த மருத்துவ ஆராய்ச்சி மைய உதவி இயக்குநர் டாக்டர் ஜெகஜோதி பாண்டியன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உடலில் சளி பிடிக்காமல் இருப்பதன் மூலம் வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். ஆடா தொடா, அரசை, அதி மதுரம், கண்டங்கத்திரி, திப்பிலி போன்றவை மார்பு சளியை வெளியேற்றும் தன்மை கொண்டவை.
இஞ்சியால் தடுக்க முடியும்...
என்றாலும் சளி பிடிக்க விடாமல் தடுக்கும் சிறப்பு மருத்துவ குணம் இஞ்சிக்கு மட்டுமே உண்டு. உணவில் அதிக அளவில் இஞ்சி, சுக்கு, வறுத்த வேர்க்கடலை, முந்திரி, அக்ரூட், பாதாம், பூமி சர்க்கரை கிழங்கு, பூனைக்காலி அமுக்ராங் கிழங்கு போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இதன் மூலம் சிக்குன் குனியா, பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை சித்த மருத்துவத்தில் அதிகாரப்பூர்வ மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. முன் எச்சரிக்கை நடவடிக்கை மூலம் நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்றார்.
வெங்காயம் - பூண்டும் கை கொடுக்கும்...
அதேபோல, வேம்பு, துளசி, வெங்காயம், பூண்டு ஆகியவையும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமாம்.
ஆங்கில மருந்துகளை சாப்பிட்டபோதும் இயற்கை மூலிகைகளை சாப்பிட்டு வரலாமாம்.
வேம்பு நீரிழிவு நோயை தடுப்பதுடன் வைரஸ் கிருமிகள் மனிதனை தாக்காமல் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. காய்ச்சலையும் குறைக்கும். ப்ளு காய்ச்சல், தொண்டை வறட்சி, சளி, அலர்ஜி, தோல் வியாதிகள், மலேரியா போன்றவற்றுக்கு வேம்பு ஒரு தீர்வாகும்.
மற்றொரு இயற்கை மூலிகையான துளசி பாக்டீரியாக்களை கொல்கிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
வெங்காயத்தில் பல்வேறு வைரஸ் எதிர்ப்பு ரசாயன பொருட்கள் உள்ளன. தேவைப்படும் போதெல்லாம் அவற்றை சாப்பிடுவதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம்.
இதேபோல் பூண்டும் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது. பாக்டீரியா வைரஸ்களை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி உள்ளது. ரத்தத்தை சுத்திகரித்து இலகுத்தன்மையாக்குகிறது.
இன்னொன்று பன்றிக் காய்ச்சலைத் தடுக்க அனைத்து வகையான மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறி உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
மாமிச உணவு தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் வைரஸ் எளிதில் தாக்கும் ஆபத்து உள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.
Labels: ஆரோக்கியம்
நீ ஒரு வீரனை ஜெயிச்சிருந்தீனா நானே தலைமை தாங்கி இந்த கோப்பைய உனக்கு கொடுத்திருப்பேன்..நீ ஜெயிச்சது ஒரு புள்ளபூச்ச..அடி வாங்குனது நான் அதனால கோப்பை எனக்குத்தான் சொந்தம்..சின்ன பய..இதுக்குமேல ஒரு அடி விழுந்துது..அடிச்சா என்னடா பன்னுவ..கொலைகேஸ்ல உள்ள போய்டுவா..
டேய் என்னடா இங்க சத்தம்?ஐய்யயோ.. அட படுபாவி பசங்களா வேலைக்காடா வந்திருக்கீங்க...............?என்னைய உசுரோட போட்டு பொதைக்கிரதுக்குள்ள வந்துருக்கீங்க...ஐய்யயோ இப்படி அந்தளி சந்தளியா ஆக்கிட்டீங்களே டா...
சினிமாக்காரிய நினைச்சி கனவு காணாம எந்திருச்சு டீ ய போடுறா என் வெண்டரு.........எங்க அண்ணன் உன்னைய புள்ளையா பெத்ததுக்கு பதிலா ஒரு கால் கிலோ அரிசிய பெத்திருந்தா பொங்கியாவது தின்னுருப்பேன்........
புதுசா ?
இல்ல பழசு
நீ எத சொல்ற
நீ எத கேக்குற
நான் உன்ன கேட்டேன்
நான் யுனிபாம்-னு நெனச்சேன்
யுனிபாம் பழசுன்னு பத்து அடி தூரத்தில வரும்போதே தெரியுது!
ஆமா .. உயர் அதிகாரி வந்த சல்யுட் பண்ணனும்னு தெரியாது........
அதிகாரி ...?? எங்க எங்க...??
ஏய் ஏய் மிஸ்டர், அதிகாரின்னு சொன்னது என்னை...
ஒரு இளைஞன் ஒரு இளைஞி கைய புடுச்சி இழுக்கிறது சகஜம்!அதெல்லாம் நீங்க கண்டுகிட கூடாது!ஏன்னா இது வாலிப வயசு!
இன்னும் ஒரு அடி அடிச்ச சேகர் செத்துடுவான்........
ஊருல இருக்கிற கழிசடை பயலுகள்லாம் வேலைக்கு வந்து என் உயிரை வாங்குரீங்களடா ...........
டேய் துடைடா..........
டேய் கீழ துடைடா..........
டேய் தரைய துடைடா..........
சாவடிக்குரானுகளே எனியே ....
டேய் பார்த்து பார்த்து
செவுத்துக்கு வலிக்க போகுது....
வேகமா துடைடா பரதேசி பரதேசி............
நாங்கெல்லாம் கருணையோட பார்த்தா கர்ப்பூரம் எரியும்கோவமா பார்த்தா குடிசையே பத்தி எரியும்..............
மல்லாக்க படுத்துக்கிட்டு விட்டத்த பாக்கிறது எவ்வளவு சொகம் அதும் ரெண்டு காலையும் விரிச்சுட்டு தூங்குறதுல என்ன ஒரு காத்தோட்டம்
இங்க பாரு இந்த குதர்கம பேசுறது குதிச்சு குதிச்சு விளையாடறது இங்க வென.. சைலெண்டா வந்தோமா படிச்சோமா பாசஆனோமாநு போய்க அது தா இந்த சீனியர் கு குடுக்குற மரியாத..
அர்த்தம் தெரியாமலே பழமொழிகளைப் பேசி வருகிறோம்.யாராவது கேட்டால் பழமொழி சொன்னா அனுபவிக்கனும், அதை விட்டுப் போட்டு ஆராயக் கூடாது என்று கமல் பாணியில் அடித்து விடுகிறோம்.சில பழமொழிகளும்,கூடவே வரும் ஆராய்ச்சியும்.
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைத் தானே வளரும்.
இதை கேட்டவுடன் எல்லோரும் ஊர்ல இருகிற பிள்ளைகளுக்கு எல்லாம் சாப்பாடு போட்டால் உங்க பையன் வளர்ந்தப் பிறகு எங்க அப்பன் ஒரு ஏமாளி என்று முத்திரை குத்தி விடுவான். ஊரான் பிள்ளை என்றால் வேறு வீட்டில் இருந்து உங்கள் வீட்டிற்கு வந்த மனைவி.கர்ப்பமாக இருக்கும் போது நிறைய சாப்பிட கொடுத்தால் வயிற்றில் இருக்கும் குழந்தை தானே வளரும்.
புண்பட்ட நெஞ்சை புக விட்டு ஆற்று.
வருத்தமாக இருந்தால் புத்தகம்(புக) படித்து மனதை ஒரு நிலைக்கு கொண்டு வருவது.அதை இந்த காதலில் தோல்வி அடைந்த கைப்பிள்ளைகள் புண்பட்ட நெஞ்சைப் புகை விட்டு ஆற்று என்று மாற்றி விட்டார்கள்.நிறைய எழுதி முடிந்தால் நீங்கள் எழுதியதையே படித்து நன்றாக புக விட்டு ஆற்றுங்கள்.
ஆறிலும் சாவு,நூறிலும் சாவு.
எதற்கு எடுத்தாலும் இதை மேற்கோள் காட்டி பெரிய வீரனாக காட்டி கொள்வது.இதற்கு உண்மையான அர்த்தம் குந்தி கண்ணனிடம் பாண்டவர்களைப் போல கர்ணனையும் காப்பாற்ற வேண்டுகிறாள்.கண்ணனோ அவன் எந்த பக்கத்தில் இருந்து சண்டை இட்டாலும் அவன் மரிப்பான் என்று சொல்கிறார்.ஆறாக பாண்டவர்களிடம் இருந்தாலும் சாவுதான்.நூறாக கௌரவர்களிடம் இருந்தாலும் சாவுதான்.
தடுக்கி விழுந்து செத்தவனும் இருக்கிறான்,மலையில் இருந்து விழுந்து பிழைத்தவனும் இருக்கிறான்.
கால் தடுக்கி விழுந்தவன் அருவாமனையில் விழுந்து செத்துப் போகிறான்.மலையில் இருந்து விழுந்தவன் கீழே இருந்த தண்ணீரில் விழுந்து பிழைத்துக் கொள்கிறான்.
குளத்துல தண்ணி வத்துனா தான் தெரியும்.யாரெல்லாம் கோமணம் கட்டி இருக்காங்கன்னு.கட்டாம இருக்காங்கன்னு
மகேஷ் குமார்
Labels: பழமொழிகள்
ஒருவர் உங்களை கல்லை கொண்டு எறிந்தால்,
நீங்கள் பூவை கொண்டு எறியுங்கள்...
மறுபடியும் கல்லை கொண்டு எறிந்தால்,
நீங்கள் பூ தொட்டிய கொண்டு எறியுங்கள்...
சாவட்டும்...!
Labels: நகைச்சுவைத் துளிகள்
துளசி இலை 10 கிராம் மிளகு தூள் 10 கிராம் பாகல் இலை 10 கிராம் கடுகு ரோகினி 40 கிராம் இவை அனைத்தையும் தேவையான அளவு நீர்விட்டு அரைத்து கடலை அளவு மாத்திரையாக உருட்டி சாப்பிட்டால் மலேரியாக் காய்ச்சல்(Maleriya) குணமாகும்.
இதன் இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு 2 வேளை 2 துளி வீதம் காதில் விட்டு வர 15 நாளில் காது மந்தம் நீங்கும்.
துளசி இலை பொடி, சுக்குத்தூள், ஓமப்பொடி, சம அளவாக எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், சிலேத்துமக்காய்ச்சல் (இன்புளூயன்சா) குணமாகும்.
துளசிச்சாறு, கரிசாலைச்சாறு இரண்டையும் கலந்து காதில் சில துளிகள் விட்டு வர காதுவலி, இரத்தம், žழ்வடிதல் குணமாகும்.
துளசி கசாயத்தில் ஜாதிக்காய் தூளைக் கலந்து குடித்தால் அதிசார பேதி தனியும்.
துளசிப்பூங்கொத்து, திப்பிலி, வசம்பு சம அளவு சூரணமாகப் பொடி செய்து அத்துடன் 4 மடங்கு சர்க்கரை சேர்த்து 1 சிட்டிகைப் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வர கக்குவான் குணமாகும்.
துளசி விதையை நீரில் ஊரவைத்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த அதிசாரம் தணியும்.
துளசி விதையை பொடியாக்கி 5 கிராம் அளவு எடுத்து தாம்பூலத்துடன் கலந்து சாப்பிட்டு வர தாது பலப்படும்.
துளசி இலை 10 கிராம் சிறிதளவு கரி உப்பு கலந்து வெந்நீருடன் சாப்பிட அžரணம் தணியும்.
துளசி இலை மிளகு, ஓமம், பூண்டு, இந்து உப்பு, தூயகற்பூரம் இவற்றை சம அளவாக எடுத்து சிறிது நீர் விட்டு அரைத்து கடலை அளவு மாத்திரைகளாகச் சாப்பிட்டால் வாந்தி பேதி நிற்கும்.
துளசி இலையை சாறு பிழிந்து 200 மில்லி கொதிக்க வைத்து சிறிது சர்க்கரை கலந்து உட்கொண்டால், இரத்த பித்த நோய் தணியும்.
துளசி இலை சாறு 100 மில்லி, ஆடாதொடை இலைச்சாறு 100 மில்லி சேர்த்துக்கொதிக்க வைத்து குடித்தால் இருமல் நிற்கும்.
துளசி இலை, சுக்கு, பிரம்ம தண்டு, கொள்ளு இவற்றை சம அளவாக எடுத்து கசாயம் செய்து 200 மில்லி அளவு குடித்தால் இழுப்பு நிற்கும்.
துளசி இலை, துளசி மலர்க்கொத்து இவ்விரண்டையும் சம அளவாக 200 மில்லி எடுத்து கசாயம் செய்து பழைய வெல்லம் சிறிது சேர்த்து குடித்தால் விக்கல், இழுப்பு நிற்கும்.
இதன் இலைச்சாறு 200 மில்லி எடுத்து சிறிதளவு இந்து உப்பு கலந்து குடித்தால் கால், கை, வலி குணமாகும்.
Labels: ஆரோக்கியம்
தாய்-தந்தை உறவுகளைப் பிரிந்த ஓலங்கள்.. நடைப்பிணமாக ஈழக் குழந்தைகள்!: ஜுனியர் விகடன்
கன்னங்கள் வற்றிப்போய் எலும்பும் தோலுமான அந்தக் குழந்தைகள் செய்த ஒரே தவறு.
தமிழ் வயிற்றில் தரித்தது தான்! சோமாலியக் குழந்தைகளை விட மோசமாக வயிறு
ஒட்டிப்போய்க் கிடக்கும் ஈழத் தமிழ்க் குழந்தைகள் இன்று சாவின் நுனியில்
தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.
தாய்-தந்தை உறவுகளைப் பிரிந்த ஓலங்கள்... உறவுகளைப் பற்றி நினைக்கக்கூட
சுவாதீனமில்லாமல் வயிற்றைத் தடவும் பசிக் குரல்கள்... எங்கே போவதெனத் தெரியாமல்
பிரமை பிடித்து அலையும் பரிதாபங்கள்.. என ஈழம், இன்று மரணக் கேணி
ஆகியிருக்கிறது.
பன்னாட்டு அமைதி அமைப்புகளும் ஈழத்தில் குழந்தைகள் மீது நடத்தப்படும்
வன்கொடூரத்தை பகிரங்கமாகக் கண்டித்திருக்கின்றன. ஆனால், சிங்கள இராணுவத்தின்
வெறிகொண்ட கொடூரத் தாக்குதல் சத்தங்களில் அந்தக் குரல்கள் இலங்கை அரசுக்கு
கேட்பதே இல்லை!
வவுனியாவில் இருக்கும் சுகாதாரத் துறை ஊழியர் ஒருவர் பேசும்போது,
''இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தங்கி இருக்கும் குழந்தைகளில்
முக்கால்வாசி பேருக்குக் காது மந்தமாகி விட்டது. தொடர்ந்து ஒலிக்கும் சிங்கள
இராணுவ பீரங்கிகளின் கொடும் சத்தம், அவர்களின் செவிப் பறையைப் புண்ணாக்கி
விட்டது. மனரீதியாகவும் அந்தக் குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப்
பட்டிருக்கின்றன.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு மக்கள் கொண்டு வரப்பட்டதுமே உடனடியாக
குழந்தைகள் தனியாகவும், பெற்றோர்கள் தனித் தனியாகவும் பிரிக்கப்படுகிறார்கள்.
பெற்றோரை விட்டுப் பிரிக்கப்படும்போது குழந்தைகள் கதறும் கூக்குரலை,
மனச்சாட்சியுள்ள இராணுவத்தினர் சிலராலேயே பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
தனித் தனியாகப் பிரிப்பதன் மூலம் குழந்தைகளைத் தனிமைப்படுத்தும் சிங்கள
இராணுவம், அவர்களை கம்பி வேலியிட்ட மைதானத்தில் அடைத்து வைத்திருக்கிறது.
நிழலுக்குக் கூட வழியில்லாமல் அல்லாடும் அந்தக் குழந்தைகளுக்கு, ஒரு நாளைக்கு
ஒரு தடவைதான் உணவு.
கடந்த வாரம் பத்து வயதுச் சிறுவர்கள் இருவர் கம்பி வேலியை வளைத்துத் தப்பிக்க
முயன்றபோது, இராணுவத்தினரிடம் பிடிபட்டனர். மொத்தக் குழந்தைகளும் பார்க்க.
அந்தச் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட வெறித்தனமான அடி, எல்லோரையும் உலுக்கி
விட்டது.
இராணுவத்தின் தாக்குதலில் காயமடைந்த குழந்தைகள், மருந்துக்கு வழியில்லாமல்
வெயிலில் எரிச்சல் தாளாமல் துடிதுடித்துப் போகிறார்கள். மதிய வேளைகளில்
இராணுவத்தினர் வரும்போது, 'ஆமி மாமா, சோறு போடுங்க...' என முகாம் குழந்தைகள்
பசி மயக்கத்தோடு ஈனஸ்வரத்தில் கெஞ்சுவதைப் பார்க்கையிலேயே நெஞ்சடைத்து விடும்!
பாவம், பசித்த வயிற்றுப் பிஞ்சுகளுக்கு, எமன்களை உறவுகொண்டாடுகிறோம் என
எப்படித் தெரியும்?
அதிலும் சில குழந்தைகள், கொடுக்கப்படும் ஒருவேளை சாப்பாட்டையும் கூட
வற்புறுத்திக் கொடுத்தாலும், சாப்பிடாமல் பித்துப் பிடித்துத் திரிகின்றன.
கொஞ்சம் விவரமான குழந்தைகளைத் தனியே அழைத்துச் செல்லும் இராணுவத்தினர், அவர்களை
என்ன செய்கிறார்கள் என்றே தெரிவதில்லை!
அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை என உறவு வழியிலான குழந்தைகளும் கூட அங்கே நெருங்க
விடாமல் கெடுபிடி காட்டப்படுகிறது. இராணுவத்தின் நடவடிக்கைகளை ஆழமாகக்
கவனித்தால்.. 'இந்தக் குழந்தைகளை மனரீதியாக சிதைத்து பலவீனப்படுத்த வேண்டும்'
என்கிற வெறி அப்பட்டமாகத் தெரிகிறது.
வவுனியா மாவட்ட அரச அதிபரான திருமதி சார்ல்ஸ், இந்த உண்மைகளை உலக
அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள ஈழக் குழந்தைகளுக்கு தொடர்ந்து
இத்தகைய கதிதான்!'' என்கிறார் வேதனை மேலிட.
தாக்குதலுக்கு ஆளாகிக் கிடக்கும் குழந்தைகள் குறித்து வருகிற செய்திகளோ,
இதைவிடக் கொடூரம்..!
''கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே பத்து வயதுக்கு உட்பட்ட நாலாயிரத்துக்கும்
மேலான குழந்தைகள் போரில் இறந்திருக்கின்றன! மூவாயிரத்துக்கும் மேற்பட்ட
குழந்தைகள், கை-கால்களை இழந்து பெருங்காயங்களோடு அல்லாடிக் கொண்டிருக்கின்றன.
இரத்தத் தொற்று வியாதிகள் பரவி, நிறையக் குழந்தைகள் படுத்த படுக்கையாகி,
எப்போது மரணம் சூழுமோ என்ற நிலையில் கிடக்கின்றன. 12 வயதுக்கு மேற்பட்ட ஆண்
குழந்தைகள் இராணுவத்தினரால் தேடித்தேடி அழிக்கப்படுகின்றன. 'எதிர்காலத்தில்
யாரும் போராளியாக உருவெடுத்துவிடக் கூடாது!' என்பதற்காகத்தான் இப்படி
திட்டமிட்டுச் செய்கிறது இராணுவம்.
சிங்களர்களின் அந்தரங்க சொர்க்க புரியாக அரசாலேயே அறிவிக்கப்பட்டிருக்கும்
அனுராதபுரத்தில், இது நாள் வரை தமிழ் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டதாகத்
தகவல்கள் இல்லை. ஆனால், இப்போது ஈழத்தில் இருந்து பிடிக்கப்பட்ட பதின்மூன்று
வயதுப் பெண் குழந்தைகள் பலர், அங்கே விபசார வற்புறுத்தலுக்கு
ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் ஒரு சிறுமி, இராணுவத்தினர் தன் மீது
கட்டவிழ்த்துவிட்ட காமக் கொடூரங்களையும், வெறித்தனங்களையும் ஒரு கடிதமாக எழுதி
வைத்துவிட்டு, இரு வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டாள்.
தற்போது முள்ளிவாய்க்கால், இரட்டை வாய்க்கால், சாளம்பன், ஒற்றைப் பனையடி ஆகிய
பகுதிகளில் மட்டும் குறைந்தது இரண்டாயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள்
இருக்கிறார்கள்.
'கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்! என உலகை ஏமாற்றி, பீரங்கித் தாக்குதலை
வெறிகொண்டு நடத்திக் கொண்டிருக்கும் இராணுவம், மீதமிருக்கும் குழந்தைகளைக்
கொல்ல வேண்டிய அவசியமே இல்லை! நாள் ஒன்றுக்கு ஆறாயிரத்துக்கும் அதிகமான அளவில்
அங்கே வந்துவிழும் குண்டுகளும், அதன் பெருஞ்சத்தமும், அதிர்வும்
மிச்சமிருக்கும் குழந்தைகளை நடைபிணமாக்கி விட்டன.
குண்டு விழும் சத்தம் கேட்டால் கூட இங்கிருக்கும் குழந்தைகள் தப்பி ஓட
நினைப்பதில்லை. என்ன நடக்கிறதென்றே தெரியாமல், வெறித்தபடி பித்துப்பிடித்த
மனநிலையில் அலைந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள்..! என்கிறார்கள் வன்னிப்
பிரதேச தமிழ்ப் பிரதிநிதிகள்.
அடுத்த தலைமுறைப் பிஞ்சுகளும் எங்கே உரிமைக் காகப் போராட கிளம்பி விடுமோ என்ற
பயத்தில் சிங்கள இராணுவம் நடத்துவது, 'இனப் படுகொலை' மட்டுமல்ல... 'ஈனத்தனமான
படுகொலை'யும் கூட!
Labels: குமுறல்கள்
ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!
தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.
இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்
Labels: எனக்கு பிடித்தவை
உடல் இளைக்கவும், பருக்கவும் தண்ணீரே காரணம்
நீரை நாம் எல்லோரும் தினமும் பருகுகின்றோம். ஆனால் நீரை எப்படி, எப்போது, எந்த அளவுக்குக் குடிக்க வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோமா என்றால் இல்லை. சாதாரணமாக நீரை நான்கு வகையாகப் பயன்படுத்தலாம்.
1. காய்ச்சாத குளிர்ந்த நீர்
2. கொதிக்க வைத்து ஆறிய நீர்
3. வெந்நீர்
4. மருந்து / மூலிகைகளுடன் சேர்த்துக் காய்ச்சிய நீர்
இப்படி தேவைக்கேற்றபடி நீரை ஆராய்ந்து அளவாகப் பருகினால் அது அமுதத்திற்கு ஒப்பாகும்.
கோடைக்காலம், இலையுதிர்க்காலம் தவிர மற்ற எல்லாக் காலங்களிலும் நீரைக் குறைவாகவே பருகவேண்டும். தேவைக்கு அதிகமாக நீரைப் பருகினால் உடலில் பித்தமும், கபமும் அதிகரிக்கும்.
வெந்நீர்
காய்ச்சலின்போது தாகத்துக்கு ஏற்றபடி வெந்நீர் பருகவேண்டும். கோரைக்கிழங்கு, பர்பாடகம், சுக்கு, வெட்டிவேர், விளாமிச்சைவேர், சந்தனம் இந்த ஆறு மூலிகைகளையும் சேர்த்துக் காய்ச்சிய நீரை சூடாகப் பருகுவது காய்ச்சலின் போது நன்மை பயக்கும்.
வெந்நீர் பசியை உண்டாக்கி, ஜீரண சக்தியை வளர்க்கும். உணவை ஜீரணிக்கச் செய்யும். தொண்டைக்கு நன்மை பயக்கும். சிறுநீர்ப்பையை தூய்மைப்படுத்தும்.
விக்கல், வயிற்று உப்புசம், வாதம், கபம், நாவறட்சி, இருமல், மூச்சுத்திணறல், ஜலதோஷம் இவற்றிற்கு வெந்நீரே சிறந்தது.
குளிர் நீர்
குளிர் நீர் பருகுவதால் குடிவெறி, உடல் களைப்பு, மயக்கம், வாந்தி, தலைச்சுற்றல், உடல் எரிச்சல், பித்தம் இவை நீங்கும்.
கொதிக்க வைத்து ஆறிய நீர்
கொதிக்க வைத்து ஆறிய நீர் எளிதில் செறிக்கும். களைப்பை நீக்கும். மூன்று தோஷங்களையும் போக்கும். ஆனால், கொதிக்க வைத்து ஆறி ஓர் இரவு தங்கிய நீர் வாதம், பித்தம், கபம் இந்த மூன்று தோஷங்களையும் வளர்க்கும்.
உணவு உட்கொள்ளும் வேளையில் மூன்று விதமாக நீரைப் பருகலாம்.
1. உணவு உட்கொள்வதற்கு முன்னால்
2. உணவு உட்கொள்ளும் போது
3. உணவு உட்கொண்ட பின்பு
இவ்வறு உட்கொள்ளும் நீரின் பயன்களும் ஒன்றுக்கொன்று வேறுபடும்.
உணவு உட்கொள்வதற்கு முன்னால்: உண்பதற்கு முன் பருகிய நீர் வயிற்றில் ஜீரண சக்தியைக் குறைக்கும். உடலை இளைக்கச் செய்யும்.
உணவு உட்கொள்ளும் போது: உணவுக்கு இடையே பருகும் நீரானது, உடலைப் பருக்கவோ, இளைக்கவோ செய்யாமல் சமநிலையில் வைக்கும். உடலில் தாதுக்களையும் சமநிலையில் வைத்துக்கொள்ளும். உணவை எளிதில் ஜீரணிக்க உதவும்.
உணவு உட்கொண்ட பின்பு: உண்ட பின்பு பருகும் நீரானது உடலிம் பருமனையும், கபத்தையும் ஏற்படுத்தும்.
(Most persons, following the above statement. I am also. Today onwards, I will follow 1st statement.)
- ஆயுள் வளர்க்கும் ஆயுர் வேதம் நூலிலிருந்து
Labels: ஆரோக்கியம்
துடிக்கும்போது யாரும் கவனிக்க மாட்டர்கள்
நின்றுவிட்டால் பலரும் துடிப்பார்கள்
Labels: ஹைக்கூப் பதிவுகள்
பாலைவனச் சூடு
நெடுந்தூரப்பயணம்!
எங்கே இளைப்பாறும் நிழல்?
Labels: ஹைக்கூப் பதிவுகள்
எப்போதாவது மன்னைத்தொடும் மழையோடு ஒரு நேர்முகம் :
நான் : தாங்கள் எப்போதாவது தான் மண்ணைத் தொடுகிறீர்கள் உண்மைதானே?
மழை : ஆம்! என்னை வரவேற்க மரங்கள் இல்லை என்ற கோபம் தான்.
நான் : உங்கள் பொழுதுபோக்கு?
மழை : சுகமாய் மேகக் கூட்டங்களோடு சுற்றித் திரிவது.
நான் : உங்கள் சந்தோசம் எப்போது?
மழை : புதிதாய் மலர்ந்த மலரினைத் தழுவும் பொது!
நான் : எப்போதும் வேலையோ?
மழை : இல்லை! இடையிடையே இலைகளில் இழைப்பாறிவிட்டுத்தான் பூமியைத் தொடுகிறேன்!
நான் : சரி! மண்வாசம் பற்றி ஏதேனும் கூறுங்கள்
மழை : அது மழைக்கான வரவேற்பு!
நான் : வானவில்?
மழை : அவன் என்னைக் காதலிப்பவன்!
என்னைக் கவரவே வர்ணம் உடுத்துகிறான்.
கரைத்துப்பர்க்கிறேன்! முடியவில்லை!
நான் : அப்படியா?
மழை : ஆம்! நீங்கள் கவிதையில் மட்டுமே வானவில்லை வளைப்பீர்கள்.
அவன் என்னை காதலிக்க அவனையே வளைக்கிறான்
நான் : இடியைப் பற்றி?
மழை : யார் முதலில் துளியாய் மாறுவதென மேகங்களுக்கிடையிலான பஞ்சாயத்து!
நான் : மின்னல்?
மழை : பஞ்சாயத்திற்க்கான வான வேடிக்கை!
நான் : மொத்தத்தில் பூமி?
மழை : என் காதலன்!
எனையூற்றிக் கொண்டு கவியெழுதும் கவிஞன்
நான் : நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை - எனில் யார் அந்த நல்லார்?
மழை : இரவல் முகந்தொலைத்தவன்!
சுயநலம் விற்றவன்!
மனிதத்தை நேசிப்பவன்!
இவர்களைக் கழித்தால்!
இருவகை உண்டு-
ஓன்று குழந்தைகள் மற்றொன்று மனவளர்ச்சியில்லாதவர்கள்
நான் : ஏன் இவர்கள் மட்டும்?
மழை : இவர்களில் இரவல் முகம் இல்லை. உங்களில்?
இவர்களில் சுயநலம் இல்லை. உங்களில்?
நான் : சரி! இறுதியாய் எங்களைப்பற்றி ஏதேனும் கூறுங்கள்?
மழை : மன்னிக்கவும்! கருத்து கூற விரும்பவில்லை!
இப்படிக்கு,
மு.கார்த்திக்
Labels: எனக்கு பிடித்தவை