லக்னோ: மூலிகைச் செடியான துளசி, பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும் வல்லமை பெற்றது என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல், பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் திறமையும் அதற்கு உண்டாம்.
இதுகுறித்து ஆயுர்வேத மருத்துவ நிபுணரான டாக்டர் யு.கே. திவாரி கூறுகையில், துளசியிடம் காய்ச்சலைத் தடுக்கக் கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில்தான் கண்டறிந்துள்ளனர். உடலின் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தக் கூடிய வல்லமை துளசிக்கு உண்டு.
எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் அதற்கு உண்டு. வைரஸ் காய்ச்சல் வந்தால் அதைக் குணப்படுத்தக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு.
ஜாப்பனீஸ் என்செபலாடிடிஸ் எனப்படும் மூளைக் காய்ச்சலுக்கு துளசியைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும், தடுக்கும் வல்லமையும் துளசிக்கு உண்டு.
நோய் வராமல் தடுக்கும் சக்தி மட்டுமல்லாமல், வந்தால் அதை விரைவில் குணமாக்கும் சக்தியும் துளசிக்கு உண்டு.
பன்றிக் காய்ச்சல் வந்தவர்களுக்கு துளசியை உரிய முறையில் கொடுத்தால் அது விரைவில் குணப்படுத்தி விடும். உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையையும் அது பலப்படுத்தும் என்கிறார் திவாரி.
டாக்டர் பூபேஷ் படேல் என்ற டாக்டர் கூறுகையில், துளசியால் பன்றிக் காய்ச்சலை வராமல் தவிர்க்க முடியும்.
20 அல்லது 25 புத்தம் புதிய துளசி இலைகளை எடுத்து அதைச் சாறாக்கி அல்லது மை போல அரைத்தோ, வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் பன்றிக் காய்ச்சல் குணமாகும்.
இப்படிச் செய்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் பன்றிக் காய்ச்சல் நம்மை அண்டாது என்கிறார்.
நோயின் தன்மை மற்றும் தீவிரத்திற்கேற்ப துளசியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார் படேல்.
துளசிச் செடிகளின் வகைகளான கிருஷ்ணா (ஓசிமம் சாங்டம்), வானா (ஓசிமம் கிராடிசிமம்), கதுகி (பிக்ரோரிசா குர்ரோவா) ஆகிய நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கும் வல்லமை பெற்றவை.
துளசியால் எந்தவிதமான பக்க விளைவுகளும் கிடையாது என்பதும் முக்கியமான ஒன்று என்கிறார் படேல்.
சித்த மருத்துவத்திலும் வழி உண்டு...
பன்றிக் காய்ச்சலுக்கு சித்த வைத்தியத்தின் மூலம் முன் கூட்டியே வராமல் தடுக்க முடியும் என்கிறார் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மத்திய அரசின் சித்த மருத்துவ ஆராய்ச்சி மைய உதவி இயக்குநர் டாக்டர் ஜெகஜோதி பாண்டியன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உடலில் சளி பிடிக்காமல் இருப்பதன் மூலம் வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். ஆடா தொடா, அரசை, அதி மதுரம், கண்டங்கத்திரி, திப்பிலி போன்றவை மார்பு சளியை வெளியேற்றும் தன்மை கொண்டவை.
இஞ்சியால் தடுக்க முடியும்...
என்றாலும் சளி பிடிக்க விடாமல் தடுக்கும் சிறப்பு மருத்துவ குணம் இஞ்சிக்கு மட்டுமே உண்டு. உணவில் அதிக அளவில் இஞ்சி, சுக்கு, வறுத்த வேர்க்கடலை, முந்திரி, அக்ரூட், பாதாம், பூமி சர்க்கரை கிழங்கு, பூனைக்காலி அமுக்ராங் கிழங்கு போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இதன் மூலம் சிக்குன் குனியா, பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை சித்த மருத்துவத்தில் அதிகாரப்பூர்வ மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. முன் எச்சரிக்கை நடவடிக்கை மூலம் நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்றார்.
வெங்காயம் - பூண்டும் கை கொடுக்கும்...
அதேபோல, வேம்பு, துளசி, வெங்காயம், பூண்டு ஆகியவையும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமாம்.
ஆங்கில மருந்துகளை சாப்பிட்டபோதும் இயற்கை மூலிகைகளை சாப்பிட்டு வரலாமாம்.
வேம்பு நீரிழிவு நோயை தடுப்பதுடன் வைரஸ் கிருமிகள் மனிதனை தாக்காமல் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. காய்ச்சலையும் குறைக்கும். ப்ளு காய்ச்சல், தொண்டை வறட்சி, சளி, அலர்ஜி, தோல் வியாதிகள், மலேரியா போன்றவற்றுக்கு வேம்பு ஒரு தீர்வாகும்.
மற்றொரு இயற்கை மூலிகையான துளசி பாக்டீரியாக்களை கொல்கிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
வெங்காயத்தில் பல்வேறு வைரஸ் எதிர்ப்பு ரசாயன பொருட்கள் உள்ளன. தேவைப்படும் போதெல்லாம் அவற்றை சாப்பிடுவதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம்.
இதேபோல் பூண்டும் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது. பாக்டீரியா வைரஸ்களை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி உள்ளது. ரத்தத்தை சுத்திகரித்து இலகுத்தன்மையாக்குகிறது.
இன்னொன்று பன்றிக் காய்ச்சலைத் தடுக்க அனைத்து வகையான மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறி உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
மாமிச உணவு தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் வைரஸ் எளிதில் தாக்கும் ஆபத்து உள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.
Labels: ஆரோக்கியம்
துளசி இலை 10 கிராம் மிளகு தூள் 10 கிராம் பாகல் இலை 10 கிராம் கடுகு ரோகினி 40 கிராம் இவை அனைத்தையும் தேவையான அளவு நீர்விட்டு அரைத்து கடலை அளவு மாத்திரையாக உருட்டி சாப்பிட்டால் மலேரியாக் காய்ச்சல்(Maleriya) குணமாகும்.
இதன் இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு 2 வேளை 2 துளி வீதம் காதில் விட்டு வர 15 நாளில் காது மந்தம் நீங்கும்.
துளசி இலை பொடி, சுக்குத்தூள், ஓமப்பொடி, சம அளவாக எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், சிலேத்துமக்காய்ச்சல் (இன்புளூயன்சா) குணமாகும்.
துளசிச்சாறு, கரிசாலைச்சாறு இரண்டையும் கலந்து காதில் சில துளிகள் விட்டு வர காதுவலி, இரத்தம், žழ்வடிதல் குணமாகும்.
துளசி கசாயத்தில் ஜாதிக்காய் தூளைக் கலந்து குடித்தால் அதிசார பேதி தனியும்.
துளசிப்பூங்கொத்து, திப்பிலி, வசம்பு சம அளவு சூரணமாகப் பொடி செய்து அத்துடன் 4 மடங்கு சர்க்கரை சேர்த்து 1 சிட்டிகைப் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வர கக்குவான் குணமாகும்.
துளசி விதையை நீரில் ஊரவைத்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த அதிசாரம் தணியும்.
துளசி விதையை பொடியாக்கி 5 கிராம் அளவு எடுத்து தாம்பூலத்துடன் கலந்து சாப்பிட்டு வர தாது பலப்படும்.
துளசி இலை 10 கிராம் சிறிதளவு கரி உப்பு கலந்து வெந்நீருடன் சாப்பிட அžரணம் தணியும்.
துளசி இலை மிளகு, ஓமம், பூண்டு, இந்து உப்பு, தூயகற்பூரம் இவற்றை சம அளவாக எடுத்து சிறிது நீர் விட்டு அரைத்து கடலை அளவு மாத்திரைகளாகச் சாப்பிட்டால் வாந்தி பேதி நிற்கும்.
துளசி இலையை சாறு பிழிந்து 200 மில்லி கொதிக்க வைத்து சிறிது சர்க்கரை கலந்து உட்கொண்டால், இரத்த பித்த நோய் தணியும்.
துளசி இலை சாறு 100 மில்லி, ஆடாதொடை இலைச்சாறு 100 மில்லி சேர்த்துக்கொதிக்க வைத்து குடித்தால் இருமல் நிற்கும்.
துளசி இலை, சுக்கு, பிரம்ம தண்டு, கொள்ளு இவற்றை சம அளவாக எடுத்து கசாயம் செய்து 200 மில்லி அளவு குடித்தால் இழுப்பு நிற்கும்.
துளசி இலை, துளசி மலர்க்கொத்து இவ்விரண்டையும் சம அளவாக 200 மில்லி எடுத்து கசாயம் செய்து பழைய வெல்லம் சிறிது சேர்த்து குடித்தால் விக்கல், இழுப்பு நிற்கும்.
இதன் இலைச்சாறு 200 மில்லி எடுத்து சிறிதளவு இந்து உப்பு கலந்து குடித்தால் கால், கை, வலி குணமாகும்.
Labels: ஆரோக்கியம்
உடல் இளைக்கவும், பருக்கவும் தண்ணீரே காரணம்
நீரை நாம் எல்லோரும் தினமும் பருகுகின்றோம். ஆனால் நீரை எப்படி, எப்போது, எந்த அளவுக்குக் குடிக்க வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோமா என்றால் இல்லை. சாதாரணமாக நீரை நான்கு வகையாகப் பயன்படுத்தலாம்.
1. காய்ச்சாத குளிர்ந்த நீர்
2. கொதிக்க வைத்து ஆறிய நீர்
3. வெந்நீர்
4. மருந்து / மூலிகைகளுடன் சேர்த்துக் காய்ச்சிய நீர்
இப்படி தேவைக்கேற்றபடி நீரை ஆராய்ந்து அளவாகப் பருகினால் அது அமுதத்திற்கு ஒப்பாகும்.
கோடைக்காலம், இலையுதிர்க்காலம் தவிர மற்ற எல்லாக் காலங்களிலும் நீரைக் குறைவாகவே பருகவேண்டும். தேவைக்கு அதிகமாக நீரைப் பருகினால் உடலில் பித்தமும், கபமும் அதிகரிக்கும்.
வெந்நீர்
காய்ச்சலின்போது தாகத்துக்கு ஏற்றபடி வெந்நீர் பருகவேண்டும். கோரைக்கிழங்கு, பர்பாடகம், சுக்கு, வெட்டிவேர், விளாமிச்சைவேர், சந்தனம் இந்த ஆறு மூலிகைகளையும் சேர்த்துக் காய்ச்சிய நீரை சூடாகப் பருகுவது காய்ச்சலின் போது நன்மை பயக்கும்.
வெந்நீர் பசியை உண்டாக்கி, ஜீரண சக்தியை வளர்க்கும். உணவை ஜீரணிக்கச் செய்யும். தொண்டைக்கு நன்மை பயக்கும். சிறுநீர்ப்பையை தூய்மைப்படுத்தும்.
விக்கல், வயிற்று உப்புசம், வாதம், கபம், நாவறட்சி, இருமல், மூச்சுத்திணறல், ஜலதோஷம் இவற்றிற்கு வெந்நீரே சிறந்தது.
குளிர் நீர்
குளிர் நீர் பருகுவதால் குடிவெறி, உடல் களைப்பு, மயக்கம், வாந்தி, தலைச்சுற்றல், உடல் எரிச்சல், பித்தம் இவை நீங்கும்.
கொதிக்க வைத்து ஆறிய நீர்
கொதிக்க வைத்து ஆறிய நீர் எளிதில் செறிக்கும். களைப்பை நீக்கும். மூன்று தோஷங்களையும் போக்கும். ஆனால், கொதிக்க வைத்து ஆறி ஓர் இரவு தங்கிய நீர் வாதம், பித்தம், கபம் இந்த மூன்று தோஷங்களையும் வளர்க்கும்.
உணவு உட்கொள்ளும் வேளையில் மூன்று விதமாக நீரைப் பருகலாம்.
1. உணவு உட்கொள்வதற்கு முன்னால்
2. உணவு உட்கொள்ளும் போது
3. உணவு உட்கொண்ட பின்பு
இவ்வறு உட்கொள்ளும் நீரின் பயன்களும் ஒன்றுக்கொன்று வேறுபடும்.
உணவு உட்கொள்வதற்கு முன்னால்: உண்பதற்கு முன் பருகிய நீர் வயிற்றில் ஜீரண சக்தியைக் குறைக்கும். உடலை இளைக்கச் செய்யும்.
உணவு உட்கொள்ளும் போது: உணவுக்கு இடையே பருகும் நீரானது, உடலைப் பருக்கவோ, இளைக்கவோ செய்யாமல் சமநிலையில் வைக்கும். உடலில் தாதுக்களையும் சமநிலையில் வைத்துக்கொள்ளும். உணவை எளிதில் ஜீரணிக்க உதவும்.
உணவு உட்கொண்ட பின்பு: உண்ட பின்பு பருகும் நீரானது உடலிம் பருமனையும், கபத்தையும் ஏற்படுத்தும்.
(Most persons, following the above statement. I am also. Today onwards, I will follow 1st statement.)
- ஆயுள் வளர்க்கும் ஆயுர் வேதம் நூலிலிருந்து
Labels: ஆரோக்கியம்