மழையோடு ஓர் நேர்முகம்

எப்போதாவது மன்னைத்தொடும் மழையோடு ஒரு நேர்முகம் :

நான் : தாங்கள் எப்போதாவது தான் மண்ணைத் தொடுகிறீர்கள் உண்மைதானே?
மழை : ஆம்! என்னை வரவேற்க மரங்கள் இல்லை என்ற கோபம் தான்.


நான் : உங்கள் பொழுதுபோக்கு?
மழை : சுகமாய் மேகக் கூட்டங்களோடு சுற்றித் திரிவது.


நான் : உங்கள் சந்தோசம் எப்போது?
மழை : புதிதாய் மலர்ந்த மலரினைத் தழுவும் பொது!


நான் : எப்போதும் வேலையோ?
மழை : இல்லை! இடையிடையே இலைகளில் இழைப்பாறிவிட்டுத்தான் பூமியைத் தொடுகிறேன்!


நான் : சரி! மண்வாசம் பற்றி ஏதேனும் கூறுங்கள்
மழை : அது மழைக்கான வரவேற்பு!


நான் : வானவில்?
மழை : அவன் என்னைக் காதலிப்பவன்!
என்னைக் கவரவே வர்ணம் உடுத்துகிறான்.
கரைத்துப்பர்க்கிறேன்! முடியவில்லை!


நான் : அப்படியா?
மழை : ஆம்! நீங்கள் கவிதையில் மட்டுமே வானவில்லை வளைப்பீர்கள்.
அவன் என்னை காதலிக்க அவனையே வளைக்கிறான்


நான் : இடியைப் பற்றி?
மழை : யார் முதலில் துளியாய் மாறுவதென மேகங்களுக்கிடையிலான பஞ்சாயத்து!


நான் : மின்னல்?
மழை : பஞ்சாயத்திற்க்கான வான வேடிக்கை!


நான் : மொத்தத்தில் பூமி?
மழை : என் காதலன்!
எனையூற்றிக் கொண்டு கவியெழுதும் கவிஞன்


நான் : நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை - எனில் யார் அந்த நல்லார்?
மழை : இரவல் முகந்தொலைத்தவன்!
சுயநலம் விற்றவன்!
மனிதத்தை நேசிப்பவன்!
இவர்களைக் கழித்தால்!
இருவகை உண்டு-
ஓன்று குழந்தைகள் மற்றொன்று மனவளர்ச்சியில்லாதவர்கள்


நான் : ஏன் இவர்கள் மட்டும்?
மழை : இவர்களில் இரவல் முகம் இல்லை. உங்களில்?
இவர்களில் சுயநலம் இல்லை. உங்களில்?


நான் : சரி! இறுதியாய் எங்களைப்பற்றி ஏதேனும் கூறுங்கள்?
மழை : மன்னிக்கவும்! கருத்து கூற விரும்பவில்லை!


இப்படிக்கு,
மு.கார்த்திக்

0 comments:

Post a Comment