பழமொழிகள் - ஆராய்ந்த பிறகு அனுபவிங்க

அர்த்தம் தெரியாமலே பழமொழிகளைப் பேசி வருகிறோம்.யாராவது கேட்டால் பழமொழி சொன்னா அனுபவிக்கனும், அதை விட்டுப் போட்டு ஆராயக் கூடாது என்று கமல் பாணியில் அடித்து விடுகிறோம்.சில பழமொழிகளும்,கூடவே வரும் ஆராய்ச்சியும்.

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைத் தானே வளரும்.


இதை கேட்டவுடன் எல்லோரும் ஊர்ல இருகிற பிள்ளைகளுக்கு எல்லாம் சாப்பாடு போட்டால் உங்க பையன் வளர்ந்தப் பிறகு எங்க அப்பன் ஒரு ஏமாளி என்று முத்திரை குத்தி விடுவான். ஊரான் பிள்ளை என்றால் வேறு வீட்டில் இருந்து உங்கள் வீட்டிற்கு வந்த மனைவி.கர்ப்பமாக இருக்கும் போது நிறைய சாப்பிட கொடுத்தால் வயிற்றில் இருக்கும் குழந்தை தானே வளரும்.

புண்பட்ட நெஞ்சை புக விட்டு ஆற்று.


வருத்தமாக இருந்தால் புத்தகம்(புக) படித்து மனதை ஒரு நிலைக்கு கொண்டு வருவது.அதை இந்த காதலில் தோல்வி அடைந்த கைப்பிள்ளைகள் புண்பட்ட நெஞ்சைப் புகை விட்டு ஆற்று என்று மாற்றி விட்டார்கள்.நிறைய எழுதி முடிந்தால் நீங்கள் எழுதியதையே படித்து நன்றாக புக விட்டு ஆற்றுங்கள்.

ஆறிலும் சாவு,நூறிலும் சாவு.


எதற்கு எடுத்தாலும் இதை மேற்கோள் காட்டி பெரிய வீரனாக காட்டி கொள்வது.இதற்கு உண்மையான அர்த்தம் குந்தி கண்ணனிடம் பாண்டவர்களைப் போல கர்ணனையும் காப்பாற்ற வேண்டுகிறாள்.கண்ணனோ அவன் எந்த பக்கத்தில் இருந்து சண்டை இட்டாலும் அவன் மரிப்பான் என்று சொல்கிறார்.ஆறாக பாண்டவர்களிடம் இருந்தாலும் சாவுதான்.நூறாக கௌரவர்களிடம் இருந்தாலும் சாவுதான்.

தடுக்கி விழுந்து செத்தவனும் இருக்கிறான்,மலையில் இருந்து விழுந்து பிழைத்தவனும் இருக்கிறான்.


கால் தடுக்கி விழுந்தவன் அருவாமனையில் விழுந்து செத்துப் போகிறான்.மலையில் இருந்து விழுந்தவன் கீழே இருந்த தண்ணீரில் விழுந்து பிழைத்துக் கொள்கிறான்.


குளத்துல தண்ணி வத்துனா தான் தெரியும்.யாரெல்லாம் கோமணம் கட்டி இருக்காங்கன்னு.கட்டாம இருக்காங்கன்னு


மகேஷ் குமார்

0 comments:

Post a Comment